உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில், இந்த ஆண்டு இந்திய திரையுலகைச் சேர்ந்த நிறைய நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
சிகப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில், கமல்ஹாசன், மாதவன், பா. ரஞ்சித், ஏ.ஆர். ரஹ்மான், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், தமன்னா, பூஜா ஹெக்டே, நவாசுதின் சித்திக், ஊர்வசி ரவ்துலா உள்ளிட்டோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேன்ஸ் விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லே மஸ்க் திரைப்படம், மாதவன் இயக்கி உள்ள ராக்கெட்ரி படமும் திரையிடப்பட உள்ளது. இதுதவிர பா.இரஞ்சித்தின் வெட்டுவம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விழாவில் வெளியிடப்பட உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு ஜூரியாக சென்றுள்ள நடிகை தீபிகா படுகோன் வித விதமான உடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கான்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்கள் குழுவுடன் அவர் இருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட புகைப்படம் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது, நாட்டுப்புற பாடகர் ஒருவர் பாட, தீபிகா படுகோனே, பூஜா ஹெக்டே, தமன்னா, ஊர்வசி போன்றறோர் நடனமாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
60 வயது நடிகருடன் நான் இருந்தனா-கஸ்தூரி அதிர்ச்சி தகவல் தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்…
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
This website uses cookies.