கடலில் மீண்டும் முத்து வளர்க்க இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம் எடுத்த முடிவு : தூத்துக்குடி கடலில் விடப்பட்ட ஐந்து லட்சம் முத்துச்சிப்பிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 September 2022, 9:37 pm

முத்து நகரமான தூத்துக்குடியில் மீண்டும் முத்து வளர்ப்பதற்காக முதன்முறையாக ஐந்து லட்சம் முத்துசிப்பி குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.

தூத்துக்குடி இயற்கை ஆபரணங்களில் விலை உயர்ந்த ஆபரணமான முத்துக்குளித்தலுக்கு பெயர்பெற்று விளங்கியது. இதன் காரணமாக முத்துநகர் என்றழைக்கப்பட்ட தூத்துக்குடி கடற்பகுதியில் முத்துகள் அழிய தொடங்கின.

தொடர்ந்து 1961 ஆம் ஆண்டு முதல் முத்து குளித்தல் தடை செய்யப்பட்டது.
தற்போது முத்து தேவையை கருத்தில் கொண்டு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் மத்திய கடல்வள ஆராய்ச்சி நிலையம் தன்து பொரிப்பகத்தில் முத்துக்களை வளர்த்தது.

சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக பொரிப்பகத்தில் வளர்க்கப்பட்ட முத்துசிப்பி குஞ்சுகள் கடலில் இன்று விடப்பட்டது. அதனை கடலில் இருப்பு செய்து வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு அருகேயிருந்து செல்லக்கூடிய கடல் பகுதியில் சுமார் இரண்டு கடல் மைல் தொலைவில் இவை இருப்பு செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.செந்தில்ராஜ், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி திருமதி.பி.எஸ்.ஆஷா ஆகியோர் முத்துசிப்பி குஞ்சுகளை கடலில் விட்டனர். கடலில் அடிப்பகுதியில் பெரிய வலைகள் செல்லாத இடுக்குகளுக்கிடையே முத்துசிப்பி குஞ்சுகள் விடப்பட்டன.

இந்த முத்துச்சிப்பிகள் சுமார் ஒரு ஆண்டு காலத்தில் முத்தாக உருவாக்கப்பட்டு அறுவடை செய்யப்படும். இதன் வளர்ச்சி மாதம் தோறும் ஆய்வு செய்யப்படும்.
இதன் மூலம் மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதே போன்று வேம்பார் கடல் பகுதியிலும் முத்துசிப்பி குஞ்சுகள் கடலில் விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். உடன் விஞ்ஞானி கவிதா உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 362

    0

    0