மீண்டும் சொதப்பிய ரோஹித்,கோலி…படு தோல்வியில் இந்திய அணி..WTC FINALS கேள்வி குறி..!
Author: Selvan30 December 2024, 12:52 pm
இந்திய ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற 4-வது டெஸ்ட் இறுதி நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 184 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை கண்டது.
முன்னதாக ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
இரண்டு பெரும் பொறுமையாக ஆடிய நிலையில் ரோஹித் மீண்டும் தன்னுடைய மோசமான பேட்டிங்கால் ஒற்றை ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.அதன் பின்பு வந்த கேல் ராகுலும் பெவிலியன் திரும்ப,கோலி வழக்கம் போல ஆப் சைட் சென்ற பந்தை அடிக்க முயற்சி செய்து,அவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
இதையும் படியுங்க: ஆளுநரைச் சந்திக்கும் விஜய்.. முக்கிய காயை நகர்த்துகிறாரா தவெக தலைவர்?
இதனால் இந்திய பேட்டர்கள் ஆட்டத்தை சமன் செய்யும் நோக்கில் ஆடி வந்தனர்.ஜெய்ஸ்வால் மற்றும் பந்த் ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்த நிலையில்,பந்தின் தவறான ஷாட்டால் அவரது விக்கெட்டை பறிகொடுத்தார்.அதன் பின்பு வந்த இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா பவுலகர்களை தாக்கு பிடிக்க முடியாமல்,அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 84 ரன்களை எடுத்திருந்தார்.இந்த படு தோல்வி மூலம் இந்திய அணி WTC FINALS செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.அடுத்து வரக்கூடிய 5 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும்,ஆஸ்திரேலியா இலங்கை மோதும் டெஸ்ட் தொடரில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியால் finals-க்கு செல்ல முடியும்.
ஏற்கனவே சவுத் ஆப்பிரிக்கா அணி முதல் அணியாக தேர்வாகியுள்ள நிலையில், தற்போது இந்திய,ஆஸ்திரேலியா,இலங்கை அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியுள்ளது.
மேலும் ரோஹித் மற்றும் கோலியின் தொடர் மோசமான பேட்டிங்கால் இருவரும் ஓய்வை அறிவிக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி,இந்திய ரசிகர்களும் தங்களுடைய ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.