ஆக்‌ஷன் ஹீரோவாக சினிமாவில் எண்ட்ரி கொடுக்க போகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. யார் தெரியுமா..?

Author: Babu Lakshmanan
18 May 2022, 11:31 pm

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் நடிப்பது என்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. சடகோபன் ரமேஷ், ஸ்ரீசாந்த் ஆகியோர் ஏற்கனவே சினிமாவில் நடித்துள்ளனர். அதேபோல் தோனியும் ஒரு அனிமேஷன் கதையில் நாயகனாக நடிக்கிறார்.

Dhoni Vijay-Updatenews360

அந்த வகையில் விரைவில் இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ஷிகர் தவானும் சினிமாவில் அறிமுகமாக உள்ளாராம்.

அவர் தற்போது இந்தி படம் ஒன்றில் நாயகனாக நடித்து வருகிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாகவும், விரைவில் அவர் அறிமுகமாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷிகர் தவான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு தனது நடிப்பு திறமையை ஏற்கனவே வெளிப்படுத்தி உள்ளார்.

ஷிகர் தவான் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ