தலைக்கேறிய போதையில் தள்ளாடி வந்த பிரபல கிரிக்கெட் வீரர்…வேதனையில் ரசிகர்கள்..!
Author: Selvan6 January 2025, 7:05 pm
விவகாரத்தால் வேதனையில் யுவேந்திர சாஹல்
இந்திய அணியில் உள்ள பல வீரர்கள் அவர்களது மனைவியை பிரிந்து வாழ்கின்றனர்.அந்த வகையில் ஹர்திக் பாண்டியா,ஷிகர் தவான்,தினேஷ் கார்த்திக் முகமது சமி என பல வீர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகத்தை சந்தித்துள்ளனர்.
அந்த வரிசையில் தற்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல் தன்னுடைய மனைவியை பிரிய போவதாக தகவல்கள் வெளியாகின.
அதுமட்டுமல்லாமல் அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை டெலீட் செய்து,அவரை அன்பாலோ செய்துள்ளார்.இதனால் இருவரும் பிரிய போவதாக நெருங்கிய வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு சாஹல் தனியார் பப்பில் சென்று மனவேதனையில் அளவுக்கு மீறி குடித்துள்ளார்.மேலும் அவர் அங்கிருந்து நடக்க முடியாமல் தள்ளாடிய படி காருக்குள்ளே வந்து அமர்ந்தார்.
Yuzvendra chahal drinked last night
— Bankaram Jat (@BANKARAM45367) January 4, 2025
💔💔💔💔#dhanashreeverma #INDvsAUS #Divorce pic.twitter.com/EUxcuOw82A
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து ரசிகர்கள் பலர் எப்போதும் கலகலன்னு சிரிப்போடு இருக்கும் சஹாலுக்கு இந்த நிலைமை ஏன் வந்தது,அவரது மனைவி தான் இதற்கு காரணமா என வேதனையோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.