7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது.
இந்த தொடரில், தோல்வியையே சந்திக்காத இந்தியா அணியும் மலேசியா அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியா அணியை வீழ்த்தி 4வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றிய இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி கோப்பையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் வழங்கினர். உடன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.
4வது முரையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, தமிழக அரசு சார்பில் வீரர்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 2 1/2 லட்ச ரூபாய் பரிசு தொகை என மொத்தமாக தமிழக அரசு சார்பில் 1.10 கோடி ரூபாய் அளவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.
அதே போல ஹாக்கி இந்தியா அமைப்பில் இருந்து வீரர்களுக்கு 3 லட்ச ரூபாய் பரிசு தொகையும், பயிற்சியாளர்களுக்கு 1 1/2 லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.
இறுதி போட்டி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீரர்களுக்கு 5 லட்சம் பயிற்சியாளர்க்ளுக்கு பரிசு என கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்த தமிழக முதல்வருக்கு, நன்றி.
போட்டிகள் நடைபெற்ற அத்தனை நாளும் அரங்கத்தை ஹவுஸ்புல்லாக வைத்த ரசிகர்களுக்கு நன்றி. இதன் மூலம் ஹாக்கி விளையாட்டு போட்டிக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.