பாரா ஒலிம்பிக்கில் புதிய மைல்கல்: தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க தலைவரை சந்தித்து நன்றி கூறிய தமிழக வீரர், வீராங்கனைகள்!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2024, 7:13 pm

சமீபத்தில் நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 29 பதக்கங்கள் பெற்று உலக அளவில் பதினெட்டாவது இடத்தை பிடித்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.

இதில் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பாரா ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்த இந்திய பதக்க பட்டியலில் தமிழக மாற்றுத்திறனாளி அணி இரண்டாம் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பதக்கங்கள் பெற்று பல சாதனைகள் செய்து வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் தான்.

கடந்த டிசம்பர் 2020 ஆண்டில் திரு சந்திரசேகர் அவர்கள் தலைவராக பொறுப்பேற்ற போது நலிவடைந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் தமிழகத்தில் பல பாரா ஒலிம்பியான்களை உருவாக்க உள்ளேன் என அன்றே கூறினார்.

மேலும் படிக்க: மேயருக்கு இணையாக லிப்ஸ்டிக்.. முதல் பெண் டபேதாரை தூக்கி அடித்த மாநகராட்சி..!!

அதுமட்டுமின்றி,

1.ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம மற்றும் நகர் புறங்களுக்கு சென்று பாரா ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய வீரர்களை கண்டறிவது

2.மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் ஏற்ப விளையாட்டு திடல்கள் ஏற்படுத்தி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவது

3.மாவட்ட அளவில் சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவியும் ஊக்கமும் அளித்து சர்வதேச அளவில் சாதிக்கவைப்பது

4.நலிவடைந்த விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள், நீதி உதவிகள் செய்வது

5.அரசு மூலமாக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகள் மற்றும் உதவிகளை வாங்கி தருவது என ஐந்து வாக்குறுதிகள் கொடுத்து அதனை நிறைவேற்றி காட்டியுள்ளார்.

20 ஆண்டுகால விளையாட்டு வீரர்களின் கனவுகளை மெய்யாக்கியவர். தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்களுக்காக துணை இருக்கும் தலைவருக்கு பல நன்றிகளை தெரிவித்தும் அவரை கொண்டாடியும் வருகின்றனர்.

இவரை போன்று ஒவ்வொரு சங்கத்தின் தலைவர்களும் செயல்பட்டால் இந்தியா வெகு விரைவில் ஒலிம்பிக்கில் முதல் இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

  • Darsha Gupta Instagram video கடல் கன்னியாக வலம் வந்த பிக் பாஸ் பிரபலம்..இணையத்தில் வைரல் ஆகும் பீச் வீடியோ..!
  • Views: - 186

    0

    0