இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி… மீண்டு வருமா..? என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள்..!!!
Author: Babu Lakshmanan9 August 2023, 2:01 pm
இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 268 புள்ளிகள் சரிந்து 65,577 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 63 புள்ளிகள் குறைந்து 19,507 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
Dr Reddys Labs. Tech Mahindra, M&M, Coal India, உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Divis Labs, ICIC Bank, Asian Paints, Apollo Hospital, Hero Motocorp உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.75 புள்ளிகள் சரிந்து 61.70 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.08 புள்ளிகள் சரிந்து 40.20 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 14.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதே போல ARSS Infrastructure Projects Ltd., நிறுவனத்தின் பங்குகள் 0.10 புள்ளிகள் உயர்ந்து 20.20 புள்ளிகளுடன் வர்த்தகமாகிறது.