வார இறுதியில் அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தைகள்… சரிவுடன் முடிந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கம்..!!
Author: Babu Lakshmanan18 August 2023, 2:04 pm
இன்றைய வார இறுதியின் வர்த்தக நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 202 புள்ளிகள் சரிந்து 64,948.66 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 55.10 புள்ளிகள் சரிந்து 19,310.20 புள்ளிகளாக வர்த்தகமாகியது.
Adani Enterpris, Adani Ports, Eicher Motors, Maruthi suzuki போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Hero Motocorp, Coal India, TCS, Hindalco, Tech Mahindra போன்ற நிறுவனங்களின் பங்குகளை சரிவை சந்தித்துள்ளன.
அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.35 புள்ளிகள் உயர்ந்து 63.20 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 1.36 புள்ளிகள் ஏற்றம் கண்டு 45.51 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.25 புள்ளிகள் சரிந்து 13.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.