சரிவை நோக்கி இந்திய பங்குச்சந்தைகள்… மீண்டும் உயருமா? எதிர்ப்பார்ப்பில் முதலீட்டாளர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 5:01 pm

இன்றைய வர்த்தக நாளில் 65,238 புள்ளிகள் என சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 73.22 புள்ளிகள் சரிந்து 65,328.70 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 42.20 புள்ளிகள் சரிந்து 19,392.35 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 65,401 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,434 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது. முந்தைய வாரங்களில் சென்செக்ஸ் 64,000, 65,000, 66,000, 67,000 என நான்கு மைல் கல்லைத் தாண்டி புதிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Apollo Hospital, Ultra Tech Cement, NTPC, Tata Motors, Infosys போன்ற நிறுவனங்களில் பங்குகள் ஏற்றம் கண்டு வருகின்றன. Tata Steel, Adani Ports, Hindalco, Hdfc Life, Bharti Airtle போன்ற நிறுவனங்களின் பங்குகளை சரிவை சந்தித்துள்ளன.

அதேபோல, கட்டுமான நிறுவனங்களான RPP Infra Projects Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.65 புள்ளிகள் சரிந்து 62.35 புள்ளிகளுடனும், Coromandel Engineering Company Ltd நிறுவனத்தின் பங்குகள் 0.76 புள்ளிகள் ஏற்றம் கண்டு 42.45 புள்ளிகளுடனும், CONSTRONICS INFRA LIMITED நிறுவனத்தின் பங்குகள் 0.25 புள்ளிகள் சரிந்து 13.75 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?