சென்னை ஃபீனிக்ஸ் மார்கெட் சிட்டியில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஷோரூமை திறந்தது இந்தியன் டெரெய்ன்

Author: Vignesh
4 September 2023, 2:17 pm

இந்த புதிய ஷோரூமை பிரபல நடிகர் அஷ்வின் குமார் திறந்து வைத்தார்

சென்னை, செப். 3,2023 ஆண்களுக்கான ஆடைகளில் சிறந்த பேஷன் பிராண்டாக திகழும் இந்தியன் டெரெய்ன், புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தனது புதிய ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது. பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் 2000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த புத்தம் புதிய ஷோரூமை பிரபல நடிகர் அஷ்வின் குமார் திறந்து வைத்தார். இங்கு ஆண்களுக்கான நவீன டி–சர்ட், சட்டை, பேண்ட் உள்ளிட்ட ஏராளமான ஆடை ரகங்கள் உள்ளன. இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் அஷ்வின் குமாருடன் இணைந்து, இந்தியன் டெரெய்ன் நிர்வாக இயக்குனர் திரு சரத் நரசிம்மன், தலைமை வர்த்தக அதிகாரி ஷெஹ்னாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய ஷாப்பிங்கிலிருந்து விலகி வாடிக்கையாளர்களுக்கு புதுமையான ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த புதிய ஸ்டோர் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் புதுமையான டிசைன்களில் ஏராளமான பிரத்யேக ஆடைகள் ஏராளமாக உள்ளன. தாங்கள் விரும்பும் ஆடைகளை வாடிக்கையாளர்கள் எளிமையாக தேர்வு செய்யும் வகையில் இந்த ஸ்டோர் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் சுத்திகரிக்கப்பட்ட தோற்றம் மற்றும் உயர்தர தயாரிப்புகளின் காட்சியுடன், புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்த ஸ்டோர் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்.

இந்த புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பேசிய இந்தியன் டெரெய்ன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு சரத் நரசிம்மன் கூறுகையில், “சென்னையிலுள்ள பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் புதிதாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ள எங்களுது ஷோரூம் இந்தியன் டெரெய்ன் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். பரபரப்பான ஷாப்பிங் இடங்கள் மற்றும் மால்களுக்கு மத்தியில், எங்களின் இந்த புதிய ஸ்டோர், வாடிக்கையாளர்கள் விரும்பியவதை வழங்குவதோடு அவர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தையும் வழங்கும். இங்கு ஆண்களுக்கான ஏராளமான ஆடைகள் புதுமையான டிசைன்களில் உள்ளன என்று தெரிவித்தார்”.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அஷ்வின் குமார், “பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்தியன் டெரெய்ன் ஸ்டோரை திறந்து வைத்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நீண்ட காலமாக இந்த பிராண்டைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் என்ற முறையில், இந்த ஆடைகளின் தரம், ஸ்டைல், புதுமை ஆகியவை குறித்து எனக்கு நன்கு தெரியும். மேலும், இங்கு அனைவரும் விரும்பும் வகையில் நவீன காலத்திற்கு ஏற்ற வகையிலான ஏராளமான ஆடைகள் உள்ளன. இங்கு இந்த புதிய ஷோரூமை திறந்துள்ள இந்நிறுவனத்திற்கும் அதன் நிர்வாகத்திற்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

2000–ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து, இந்தியன் டெரெய்ன் என்பது இந்திய ஆண்கள் பேஷன் துறையில் அனைவராலும் உச்சரிக்கப்படும் பெயராக. இருந்து வருகிறது. அதன் சிறப்பு வாய்ந்த கைவினைத்திறன், மிகவும் கவனமுடன் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ள ஆடை ரகங்கள் மற்றும் தற்கால வடிவமைப்பு நெறிமுறை ஆகியவற்றிற்காக இவை இந்திய ஆண்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. பலரது பேஷன் ரசனைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்நிறுவனம் ஆடைகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் வடிவமைத்து வருகிறது. தற்போதைய காலத்திற்கு ஏற்ற வகையில் இதன் ஆடை ரகங்கள் அனைத்து ஆண்களையும் கவரும் வகையில் உள்ளன. மிக உயர்ந்த தரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்வதற்கான பிராண்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இதன் வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. வாடிக்கையாளர்கள் இதன் https://www.indianterrain.com –ல் ஆன்லைனிலும் ஷாப்பிங் செய்யலாம்.

இந்தியன் டிரெயன் பேஷன் நிறுவனம் பற்றி : ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முன்னணி ஆடைகள் பிராண்டாக திகழும் இந்நிறுவனத்தின் முதல் ஸ்டோர் கடந்த 2000–ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தையில் கடந்த 2011–ம் ஆண்டு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்நிறுவனம் ஆண்களுக்கான சட்டைகள், பேண்ட், டி-சர்ட்டுகள், ஷார்ட்ஸ், ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள் மற்றும் டெனிம்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. செப்டம்பர் 2015–ல், இந்நிறுவனம் “Indian Terrain BOY” என்ற பிராண்டை அறிமுகப்படுத்தியது. 4 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்காக இந்த ஆடை ரகங்கள் பிரத்யேகமாக

வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சட்டை, டி–சர்ட், பேண்ட், ஷார்ட்ஸ், குளிர் கால ஆடைகள் என ஏராளமான ரகங்கள் உள்ளன. 500 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்து வரும் இந்நிறுவனம் நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட மல்டி பிராண்ட் ஸ்டோர்கள், 400க்கும் மேற்பட்ட பிரமாண்ட ஸ்டோர்கள், 200க்கும் மேற்பட்ட பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகள் மற்றும் இணையதளங்கள் மூலமாகவும் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

  • Rajinikanth Apologize To Nepoleon போன் போட்டு மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்… நேற்று என்ன நடந்தது?
  • Views: - 346

    0

    0