மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கருத்து..!!

Author: Rajesh
1 February 2022, 5:35 pm

கோவை: மத்திய பட்ஜெட்டில் சிறு குறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாததால் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ராணுவத் தளவாடங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு 68 வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அதே போல், ஆயுத உற்பத்தியை உள்நாட்டிலே மேற்கொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது சிறு குறு தொழில்களுக்கு பயனளிக்கும். இந்த பட்ஜெட்டை நீண்ட கால பட்ஜெட்டாக பார்க்கிறோம். உடனடி பலன் கிடைப்பதாக தெரியவில்லை. அதேபோல் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், சாலை வசதிக்கு ரூ. 25 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது. சாலை வசதிகள் மேம்பட்டால் பொருளாதாரம் மேம்படும்.

மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில் இதனை தடுக்கக் வேண்டும் என்று கோரிக்கை நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதில் இல்லை. அதே போல வருமான வரிக்கான உச்சவரம்பு குறைக்கப்படவில்லை. ஜாப் ஆர்டர்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் டிரோன் தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஜனவரி மாதம் ஜி.எஸ்.டி மூலம் வரி வருவாய் அதிகம் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே வருவாயை அதிகமாகும்போது வரியை குறைப்பதாக கூறினார்கள். எனவே ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும். மொத்தமாக ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக இது உள்ளது என்றார்.

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…