கணவரும் மாமியாரும் யூடியூப் பார்த்து செய்த வேலை.. பறிபோன பச்சிளம் உயிர்!

Author: Hariharasudhan
12 December 2024, 5:12 pm

புதுக்கோட்டையில் யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த நிலையில் குழந்தை இறந்தது குறித்து பெண்ணின் கணவர், மாமியாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள செங்கீரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் – அபிராமி தம்பதி. அபிராமி, சமீபத்தில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், கணவர் ராஜசேகரனுக்கு அலோபதி மருத்துவம் மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், அபிராமிக்கு நேற்று பிரசவ வலி வந்து உள்ளது. அப்போது, அவரை ராஜசேகரன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அதேநேரம், யூடியூப்பில் பிரசவம் பார்ப்பது எப்படி எனப் பார்த்துள்ளார். பின்னர், தனது தாயிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

delivery by watching Youtube in Pudukkottai

இதனையடுத்து, அபிராமியின் கணவரும், மாமியாரும் சேர்ந்து அபிராமிக்கு யூடியூப் பார்த்தபடியே பிரசவம் பார்த்து உள்ளனர். அப்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனால் 3 பேரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது.

Baby died during delivery by watching Youtube in Pudukkottai Aranthagi

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர் உள்பட மூவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். பின்னர், இதுகுறித்து அபிராமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக வந்து பார்த்த போது அபிராமியின் உடல்நிலை மோசமாக இருந்து உள்ளது.

இதையும் படிங்க: இரவிலே நடந்த இரண்டு சம்பவங்கள்.. ‘சந்திரபாபு நாயுடு இதனை விவாதிக்க வேண்டும்’.. ஆந்திராவில் அதிர்ச்சி!

இதனிடையே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, அபிராமியை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். மேலும் இது குறித்து ஆவுடையார் கோவில் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 97

    0

    0

    Leave a Reply