தொப்புள் கொடியுடன் சாலையோரம் கிடந்த சிசு சடலம்..அதிர்ந்து போன பொதுமக்கள்…பெற்றோரைத் தேடும் போலீசார் .!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 11:21 am

பழனி அருகே புறவழிச் சாலையில் தொப்புள் கொடி அகற்றப்படாத நிலையில் கிடந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி அடுத்த சண்முக நதி புறவழிச் சாலையில் தொப்புள் கொடி கூட அகற்றப்படாத இறந்த குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அந்த வழியாக விவசாய பணிகளுக்காக சென்றவர்கள் குழந்தையின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து சென்ற பழனி நகர காவல் நிலைய போலீசார் பார்த்தபோது வீட்டில் பிரசவமான குழந்தையை தொப்புள் கொடி அகற்றாத நிலையில், சடலமாக மர்ம நபர்கள் வீசி சென்றது தெரியவந்துள்ளது.

உடனடியாக குழந்தையின் சடலத்தை மீட்பு பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையை பெற்ற தாய் யார்? குழந்தை இறந்த நிலையில் பிறந்ததால் வீசி சென்றனரா ?அல்லது உயிருடன் வீசிச் சென்றனரா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி புறவழிச் சாலையில் இறந்த நிலையில் கிடந்த குழந்தையின் உடலால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 408

    0

    0