திண்டுக்கல் அருகே பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆண் குழந்தை தடுப்பூசி போட்ட மறுநாளே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே உள்ளது பிள்ளையார் நத்தம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகள் – விஜயகுமார் சுகன்யா. இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 52 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்தது. குரு பிரசாத் என்று அந்த குழந்தைக்கு பெயர் வைத்தார்கள்.
குழந்தை பிறந்து 45 நாட்களுக்கு பிறகு போடப்படும் தடுப்பூசியை போட வேண்டும். ஆனால் 52 நாட்களாகி போடவில்லை என்பதால், உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக ஆலாம்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டனர்.
நேற்று புதன்கிழமை தடுப்பூசி போட்டு ஒரு நாள் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்கு, இன்று காலை மூக்கிலும், வாயிலும் ரத்தம் கசிந்துள்ளது. இதனால், பதறிப் போன பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர்.
அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போடப்பட்டாதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.