மதுரை அரசு மருத்துவமனையில் 50 நாட்கள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையின் போது உணவுக்காக வைத்திருந்த டியூபை அகற்றாமல் மருத்துவர்கள் டீ-சார்ஜ் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் – மீனாட்சி தம்பதியினருக்கு நவம்பர் 14 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மூச்சுத்திணறல், எடை குறைவு, சக்கரை குறைபாடு உள்ளிட்டவைகளுடன் குழந்தை பிறந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் 21 நாட்கள் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகி தங்களது சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு சென்றுள்ளனர். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் எடுத்து பார்த்த பொழுது, குழந்தைக்கு வயிற்றில் உணவுக்காக வைக்கப்பட்ட டியூப் அகற்றாமல் இருப்பதாக மருத்துவர் கூறியதோடு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.
இதனால், தற்போது பச்சிளம் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மிகவும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாக தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பச்சிளம் குழந்தைக்கு வயிற்றில் வைக்கப்பட்ட டியூப் அகற்றப்படாமல் இருப்பதாகவும், மிகவும் ஆபத்தான நிலையில், உள்ளதாக தாயார் குற்றம்சாட்டினார். இதனால் தற்போது மீண்டும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், தற்பொழுது குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தையின் வயிற்றில் டியூப் இருப்பதாக ஸ்கேன் ரிப்போர்ட் கிடைத்துள்ள நிலையில், முழுவதும் மீண்டும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்ட பின்பாகவே முழுமையான தகவல் தெரியவரும், என கூறியுள்ளனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.