கடலில் தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் மிதந்த பச்சிளம் குழந்தை சடலம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2022, 7:44 pm
தூத்துக்குடியில், உள்ள தெற்கு கடற்கரை சாலையில் உள்ள படகு குளம் அருகே தெற்கு பகுதியில் நடை பயிற்சிகென்று போடப்பட்டுள்ள நடைப்பயிற்சி பாதைகக்கு கிழக்கு பகுதியில் குப்பைகளுடன் சேர்ந்து பொம்மை போன்று ஒரு உருவம் மிதந்துள்ளதை காலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது அது பிறந்த சில மணிநேரங்களிலே ஆகி தொப்புள் கொடி அறுக்கப்படாமல் தொப்புள் கொடியுடன் குழந்தை கிடந்துள்ளதும் அதனை மீன்கள் கடித்து உள்ளதும் தெரியவந்துள்ளது.
இப்பகுதியானது, தருவைகுளம் கடற்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் கடற்காவல் நிலைய காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வந்து வழக்கு பதிவு செய்து பின்பு குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். அப்போது அது பெண் குழந்தை என தெரிய வந்தது.
தருவைகுளம் டிஎஸ்பி பிரதாபன், உதவி ஆய்வாளர் முத்துமாரி தேவேந்திரர், கட் கடலோர காவல் குழும ஆய்வாளர் சைரஸ் சம்பவ இடத்தை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருக்கின்றனர்.
மேலும், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி குழந்தையை இறப்பு குறித்த காரணம் தெரிய பெற்றபின் உரிய வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த குழந்தையை யார் கொண்டு வந்து போட்டார்கள் தவறான வழியில் பிறந்த குழந்தையா? இல்லை என்றால் வேறு ஏதேனும் கொலை செய்யப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளதா? இல்லையென்றால் குழந்தை கடத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.