Categories: தமிழகம்

தமிழகத்தில் பரவி வரும் இன்புளுயன்சா வைரஸ்.. மகிழ்ச்சியான செய்தியை சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!

சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் உரியவர்களுக்கு கொடுக்கப்படுக்கும் அந்த உரியவர்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் 100 சதவீதம் பேருக்கும்,ஏழை எளிய மக்களுக்கும் கிடைக்கும்.

உரிமை தொகையில் தகுதி ஏன்? என்று விமர்சிக்கிறார்கள், 1000 ரூபாய் உரிமை தொகையை பெசன்ட் நகரில் இருப்பவர்களுக்கும், காரில் வலம் வருபவர்களுக்கும், வருமான வரி செலுத்தும் மகளிருக்கு, 7 அடுக்குமாடி பங்களாவில் இருப்பவர்களுக்குமா ? கொடுக்க முடியும் ? என்று பேசினார்.

தொடர்ந்து, பெண்கள் அனைவருக்கும் சேலை பரிசளித்த பின் ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், குடிசைப்பகுதிகளில் இருக்கும் மகளிர் தினந்தோறும் வாழ் வாதரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர். 1986 இல் கலைஞர் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கியது மூலம் பல நல்ல முன்னேற்றங்கள் உள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்களை மகளிருக்கு அறிவித்து உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.

முதல் முறையாக வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம் 1586 இடங்களில் ஒரே நாளில் நடத்தப்பட்டது. 10 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் 14 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர்.

4308 மருத்துவர், செவிலியர் , மருத்துவம் சார்ந்த காலிப் பணியிடங்களை எம் ஆர் பி மூலம் நிரப்பப்படும் என கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டது போல் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது.

1021 மருத்துவ பணியாளர்கள் தேர்வு குறித்து போடப்பட்டு இருந்த வழக்கு முடிவடைந்துள்ள நிலையில், 1021 மருத்துவர்களையும் நியமிக்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளது. ப் க 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்து உள்ளனர், இதற்கு ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.

அதே போல 986 மருந்தாளர் பணிக்கான தேர்வு ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது என்றார். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. பின் படிப்படியாக குறைந்தது ,சில நாட்கள் ஒற்றை இலக்க பாதிப்பாக இருந்தது.

இப்போது XBB BA4 எனப்படும் உருமாறிய ஒமிகிரான் பாதிப்பு ஒரு நாளைக்கு 80 பேர் வரை தமிழ்நாட்டில் உள்ளது, இந்தியாவில் 1500 மேல் கடந்து உள்ளது.

இதனை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எங்கும் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இல்லை, தனி தனியே தான் பாதிப்பு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2% பேருக்கு தோராயமாக ஆர் டி பி சி ஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவுக்கு கூட பாதிப்பு இல்லை.

வைரஸ் பாதித்தவர்கள் பாதிப்பு சரியாகும் வரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவர் அறிவுரை இன்றி மருந்துகளை உட்கொள்ள கூடாது என்றும்

பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் பயன்படுத்தி கொள்ள அரசு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.

தற்போது பாதிக்கப்படுபவர்கள் அனைவருக்கும் xbb ba4 என்ற உருமாறிய ஓமிக்ரான் தான் உள்ளது என்ற அவர், நேற்று தமிழ்நாட்டில் 86 பேர் இதற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது. முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும்.

இந்தியாவில் முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி போடப்படுகிறது. விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனையில் கூட இன்புளுயன்சா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

14 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

15 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

17 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

18 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

18 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

19 hours ago

This website uses cookies.