அட..இவங்கதான் ‘சோ’வின் மருமகளா?: இவங்க டாப் நடிகையாச்சே…இவ்ளோ நாளா இது தெரியாமா போயிருச்சே..!!
Author: Rajesh1 April 2022, 1:48 pm
சீனிவாச ஐயர் ராமசாமி என்பது தான் ‘சோ’ ராமசாமியின் இயற்பெயர். இவர் நாடக கலைஞராக, காமெடியனாக, அரசியல் வல்லுனராக, எழுத்தாளர் என பல முகம் கொண்டவர். இவரின் நய்யாண்டி தனமான பேச்சும், பேச்சில் இருக்கும் அர்த்தமும் அவருக்கே உரிய தனி ஸ்டைலை உருவாக்கியவர்.
இவர், எந்தவொரு அரசியல் தலைவரையும் விமர்சனம் செய்வதை தவறியதில்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளையே அவர்களுக்கு எதிராக அவர் முன்னரே விமர்சனம் செய்யும் துணிச்சல் யாருக்கு உண்டு என்றால்? அனைவரும் கூறுவார் சோ ராமசாமி தான் என்று.
எவ்வளவு விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்ததே இல்லை. அதனால் தான் இரண்டு மாபெரும் தலைவர்களுடனும் இவரின் நட்பு இறுதிவரை தொடர்ந்து கொண்டே இருந்தது. இவரது காமெடிக்கு மிக அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். பத்திரிகையாளராகவும் இருந்த அவர் தொடங்கி நடத்திவந்த துக்ளக் இதழ் தற்போதும் வந்துகொண்டிருக்கிறது.
தற்போது, சோ ராமசாமியின் குடும்ப உறவுகள் பற்றிய சில தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், ‘சோ’வின் மருமகள் பிரபல நடிகை என்பது குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. அந்த நடிகை பிசியாக இருக்கும் டாப் நடிகைகளில் இவரும் ஒருவர் தான்.
அந்த நடிகை வேறு யாருமில்லை நம்ம படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் தான் தானாம். சோவின் சகோதரி மகள் தான் ரம்யா கிருஷ்ணன். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரம்யாகிருஷ்ணன்.
ரம்யாகிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தது ஆரம்பத்தில் சோவுக்கு பிடிக்கவில்லையாம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதன் பின் படையப்பா படத்தில் அவர் நடித்த நடித்ததைப் பார்த்து சோ பாராட்டி, நான் நினைத்தது தவறு. படையப்பா படம் பார்த்துவிட்டு தான் உணர்ந்தேன் என்று கூறி இருந்தார்.
தற்போது சோவுடன் ரம்யா கிருஷ்ணன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.