கரும்பு அரவை பணியை துவக்கி வைப்பதில் எழுந்த போட்டி…? திமுக – அதிமுகவினரிடையே தள்ளு முள்ளு… அப்செட்டான கரும்பு விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 8:00 pm

கரும்பு அரவையை முதலில் யார் துவக்கி வைப்பது என்பதில் ஏற்பட்ட மோதலில், திமுக, அதிமுகவினருக்கிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சரக்கரை ஆலையில் இந்த வருடத்திற்கான கரும்பு அரவை துவங்கும் பணி நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. அன்பழகன், தனது ஆதரவாளர்களுடன் வந்து இந்தப் பணிகளை திறந்து வைக்க வந்தார்.

அதே போல, முன்னாள் அமைச்சரும், திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பனும், அவரது ஆதரவாளர்களுடன் கரும்பு அரவை பணிகளை துவக்கி வைக்க வந்தார்.

யார் முதலில் அரவையை துவக்கி வைப்பது என்பதில் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு, வாக்கு வாதம் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் கரும்பு அரவையை துவக்கி வைக்க இருதரப்பினரும் முயன்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ