கோவை ; வாயில் காயத்துடன் சுற்றித் திரியும் மக்னா யானைக்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை வனச்ச ரகத்திற்குட்பட்ட பகு தியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக அடிக்கடி நடமாடி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில்இ வனத்துறையினர் வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய்ப்பட்டுள்ளது. பின்னர், யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சி செய்தனர்.
இருப்பினும், அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது. அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை. யானை வாயில் உணவு போட்டால் அது முழுவதுமாக வாய் வலியாகவே வெளியேறுகிறது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர். அதையும் யானை உட்கொள்ளவில்லை.
இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை காளால் மிதித்து சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால், அனைவரும் ஓடி சென்று தப்பினர். தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், காயம்பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.