பெட்ஷீட் மூலம் வந்த விந்தணுக்கள்.. பார்க்காமலே தொடாமலே பிறந்த குழந்தை.. மியாமி சிறையில் நடந்தது என்ன?
Author: Hariharasudhan17 December 2024, 4:03 pm
அமெரிக்காவின் மியாமி சிறைக்கைதி, தனது சக கைதியை பார்க்காமலே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மியாமி: அமெரிக்காவின் மியாமியில் டர்னர் கில்ஃபோர்ட் நைட் என்ற சிறை உள்ளது. இந்த சிறையில் உள்ள பெண் கைதி டெய்சி லிங்க் (29). இவர் கொலைக் குற்றம் ஒன்றிற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூலை மாதம் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
ஆனால், சிறையில் அவர் யாரையும் நேரில் சந்திக்காத நிலையில் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பது மர்மமாக மாறியது. பின்னர், இது தொடர்பான விசாரணையில், அதே சிறையின் வேறு பகுதியில் ஜோன் டெபாஸ் (24) என்ற ஆண் கைதி அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், சிறை செல்லில் இருந்த ஏர் கண்டிஷனிங் வென்ட் இருவரது அறைகளை இணைப்பதாக இருந்துள்ளது. எனவே, இதன் மூலம் டெய்சி, ஜோன் டெபாஸ் பேசத் தொடங்கி உள்ளனர். அதிலும், தனிமையைப் போக்கிக் கொள்ள மணிக்கணக்கில் பேசி உள்ளனர்.
அப்போது ஒரு முறை, தனக்குத் தந்தையாக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக டெபாஸ் கூறி இருக்கிறார். ஆனால், இப்போது சிறையில் இருப்பதால் அதற்கு வாய்ப்பில்லை என்று டெய்ஸியிடம் கூறி புலம்பியிருக்கிறார். இதனால் வேதனை அடைந்த டெய்சி, ஒரு திட்டத்தை வகுத்து உள்ளார்.
இதன்படி, அந்த சிறையில் உள்ள ஏசி வென்ட் ஒரு எல் (L) வடிவில் இருப்பதை அறிந்த டெய்சி, அதில் எதைப் போட்டாலும் அது சரியாக டெபாஸ் அறையில் தான் வந்து விழுமாம். இதை தங்களுக்குத் சாதகமாக பயன்படுத்திய டெய்சி, போர்வையை தனது அறையில் இருந்து வென்ட் மூலம் போட்டுள்ளார். அது டெபாஸ் அறைக்குள் வந்துள்ளது.
இதனையடுத்து, டெபாஸ் தனது விந்தணுக்களை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு, அந்த மீண்டும் போர்வையிட்டு கட்டிவிடுவாராம். இதனை டெய்சி இழுத்து எடுத்துக் கொள்வார். இப்படியே தினமும் 5 முறை வீதம், ஒரு மாதம் முழுக்க டெபாஸ் விந்தணுவை அனுப்பியுள்ளார். இதனை டெய்சி தனது பெண்ணுறுப்பின் வழியாகச் செலுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சாலையின் இருபுறமும் தலை நசுங்கிய சடலங்கள்.. நாமக்கல்லில் பரபரப்பு!
இதன் மூலமாகவே அவர் கருவுற்று குழந்தையும் பெற்றெடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், சந்தேகம் தீராத சிறை அதிகாரிகள், டெய்சிக்கு பிறந்த குழந்தைக்கு மரபணு சோதனை நடத்தி உள்ளனர். இதில், டெபாஸ் தான் குழந்தையின் தந்தை என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால், டெய்சியை பார்த்துக் கூட இல்லை என்றே டெபாஸ் கூறுகின்றார். இதனை சிறைத்துறையினர் வியப்புடன் பார்த்த அதே வேளையில், டெய்சியின் குடும்பத்தினரே நம்ப முன்வரவில்லை. அதேநேரம், மருத்துவ உலகில் இது 5 சதவீத அளவு சாத்தியம் என்றே கூறப்படுகிறது.