நண்பனின் மாமியார் மீது தீராத மோகம்… தனிமையில் அடிக்கடி உல்லாசம் : நள்ளிரவில் நடந்த ஷாக்.. புதுச்சேரியில் கச்சேரி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2023, 1:55 pm

நண்பனின் மாமியார் மீது தீராத மோகம்… தனிமையில் அடிக்கடி உல்லாசம் : நள்ளிரவில் நடந்த ஷாக்.. புதுச்சேரியில் கச்சேரி!!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே மொரட்டாண்டி சனிஸ்வர பகவான் கோவில் பகுதியில் வசிப்பவர் துரைசாமி . இவரது மகன் கோபி (வயது 26 ). இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

அதே மொரடாண்டி காலனி முத்துமாரியம்மன் கோவில் தெருவை தனசேகர் மகன் கவுதம், (வயது 22 ) வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். கோபியும் கௌதமும் நண்பர்கள் ஆவர்.

நேற்றைய முன்தினம் 19ஆம் தேதி இரவு வீட்டில் தனியார் இருந்துள்ளார் கோபி,. அப்போது அங்க வந்த கவுதம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தண்ணீர் கொண்டு வந்த சமயத்தில் திடீரென கவுதம் தான் மறைத்து வைத்திருந்த சுத்தியை எடுத்து கோபியை தலையில் பின்பக்கமாக பலமுறை தாக்கி உள்ளார்.

இதையடுத்து நிலைதடுமாறி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் கோபி. அங்கிருந்த கவுதம் உடனே தப்பி ஓடினார். கோபியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் ஆரோ காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

கவுதம் (இடது) மற்றும் கோபி (வலது)

உடனே வந்த போலீசார் ஆபத்தான நிலையில் உள்ள கோபியை மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் கவுதம் காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.

பின்னர் விசாரணையில், கவுதமின் மாமியாரான சசிகலா (வயது 40) அதே பகுதியில் இரவு நேர உணவகத்தை நடத்தி வருகிறார். அவ்வப்போது கடைக்கு செல்லும் கோபி சசிகலாவுடன் தகாத உறவில் இருந்துள்ளார்.

இதையறிந்த கவுதம், கோபியை எச்சரித்துள்ளார். ஆனால் நண்பன் முக்கியமல்ல, மோகம்தான் முக்கியம் என கள்ளதொடர்பில் இருந்து விடுபடாமல் சசிகலாவுடன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுதம், கோபியை தீர்த்துக்கட்ட சுத்தியை எடுத்து சென்று தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து கவுதமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • veera dheera sooran director told that smoking and drinking scenes are not in his films மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…