கோவையில் தொடரும் ரெய்டு: தனியார் கல்வி குழுமத்தின் தலைவர் வீட்டில் சோதனை..!!
Author: Rajesh15 March 2022, 11:44 am
கோவை: கோவையில் தனியார் கல்வி குழுமத்தின் தலைவர் மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை மாநகர மாவட்ட ஆயுதப்படை அலுவலகம் அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் தலைவர் மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காலை சுமார் 6:30 மணியளவில் இருந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் பத்திற்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வளாகத்தின் வெளியே கோவை பந்தய சாலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்