தடுப்பூசி விஷயத்தில் பழங்குடியினர் அளித்த ஒத்துழைப்பு கூட படித்தவர்கள் அளிக்கவில்லை: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி..!!
Author: Rajesh9 April 2022, 2:04 pm
தமிழகத்தின் மலைவாழ் மக்கள் பழங்குடியினர் கூட தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு ஒத்துழைப்பு தருகிறார்கள் ஆனால் படித்து பட்டம் பெற்ற பலர் முதலாவது தடுப்பூசியை கூட செலுத்தி கொள்ளவில்லை – திருச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சியில் 55வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு தேவைப்படும் மற்றவர்களுக்கு பொறுத்தி உள்ளனர்.
60 லட்சம் பேர் பல்வேறு இடற்பாடுகளுடன் இருப்பது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளனர். இதில் இரத்த அழுத்தல் மற்றும் சக்கரை நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளது என்பது கூட தெரியாமல் இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களிடம் எடுத்துக்கூறி வாழ்வில் முறையை மாற்றினால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை எடுத்துக் கூறி வருகிறோம்.
தமிழகத்தில் 6640 பேர் கிட்னிக்காவும், 314 பேர் கல்லீரல், 40 பேர் இதயம், 24 பேர் கைகள் போன்ற உடல் உறுப்புகளுக்காக காத்து உள்ளனர். கொரோனோ கட்டுக்குள் இருந்தாலும் தொடர்ந்து கண்காணிப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
2 வது அலையில் 3 லட்சம் 14பேர் படுக்கையில் இருந்தனர். ஆனால் இன்று முழுவதும் குறைந்துள்ளது இதற்கு எல்லாம் காரணம் தடுப்பூசிகள் தான். 92% என்கிற அளவில் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். தடுப்பூசியால் தான் மூன்றாவது அலையில் இறப்பு இல்லாமல் இருந்தது. 1500க்கும் மேற்பட்ட ஐ.சி.யூ படுக்கைகளை நாம் எல்லா மாவட்டத்திலும் தயார் செய்து வைக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனோ தொற்று வரும் உருமாறுதல்களை பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். மாறி மாறி தகவல்கள் வந்து கொண்டு உள்ளது. உருமாறி வரும் கொரோனோ குறித்து இது வரை தமிழகத்தில் அது XE போன்ற வைரஸ் தொற்று போல் ஏதும் இல்லை
BA2ஒமிக்ரான் வகை தான் தமிழகத்தில் உள்ளது.
மரபியல் ரீதியாக நாங்கள் தொடர்ந்து டெஸ்ட் எடுத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தி உள்ளோம். சர்வதேச விமான நிலையத்தில் 2% என்கிற அளவில் தோராயமாக டெஸ்ட் எடுத்து வருகிறோம். தமிழகத்தில் 1.37 கோடி பேர் இரண்டாவது தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் 44 லட்சம் பேர் முதல் தடுப்பூசிகளை கூட போடாமல் உள்ளனர்.
பழங்குடியினர்கள் கூட ஒத்துழைப்பு கொடுத்து செலுத்தி கொள்கின்றனர் – ஆனால் படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் தான் ஒத்துழைப்பு அளிப்பதில்லை.
உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தான் முதலாவதாக வழங்குகிறோம் – அதன் பின்னர் இந்தியாவில் வெளி மாநிலங்கள் உள்ளவர்களுக்கும் முழுவதும் வழங்கி வருகிறோம். பின்னர் இந்தியாவிலேயே யாரும் உறுப்புகளை தேவை இல்லை என்கிற பட்சத்தில் கடைசி வாய்ப்பாக வெளிநாட்டவருக்கு அளிக்கிறோம். தமிழகத்தில் 29 மாவட்டத்தில் கொரோனோ பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது என தெரிவித்தார்.