கஞ்சா வழக்கில் கைதான 6 மாத கர்ப்பிணியான ‘இன்ஸ்டா தமன்னா’ நீதிமன்றத்தில் ஆஜர் : பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 7:05 pm

கோவையில் கஞ்சா வழக்கில் வினோதினி என்கின்ற தமன்னாவை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று கைது செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து வீடியோ வெளியிட்ட கோவையைச் சேர்ந்த பெண் வைரல் ஆனார்.

இந்த வீடியோக்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து வீடியோ வெளியிட்ட வினோதினி என்ற தமன்னாவை போலீசார் தேடி வந்தனர்.
அதேபோல கஞ்சா வழக்கிலும் தேடி வந்தனர்.

இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் வினோதினி என்ற தமன்னா மற்றும் சூரிய பிரசாத் ஆகியோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வினோதினி என்ற தமன்னா நீதிமன்றத்தில் வாய்தாவிற்கு தொடர்ந்து ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதி தமன்னாவிற்கு பிடிவாரண்ட் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் தமன்னாவை தேடி வந்த நிலையில் இன்று காலை சங்ககிரி பகுதியில் கைது செய்தனர்.

பின்னர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்தினர். இந்த நிலையில் வினோதினி என்கின்ற தமன்னாவை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் வரும்
29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் போலீசார் வினோதினி என்ற தமன்னாவை நீதிமன்றத்தில் இருந்து கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். வினோதினி என்ற தமன்னா ஆறு மாதம் கர்ப்பிணி பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 354

    0

    0