இன்ஸ்டாகிராமில் பழக்கம்… 17 வயது சிறுமியிடம் வேலையை காட்டிய இளைஞர்… போக்சோவில் கைது செய்து சிறையில் அடைப்பு!!
Author: Babu Lakshmanan22 July 2023, 2:03 pm
இன்ஸ்டாகிராமில் பழகிய 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மாப்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டிய இளைஞர் போக்க்ஷோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞருக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தில் சிறுமி தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஷேர் செய்ததாகவும், கடந்த மே மாதம் சிறுமி உளுந்தூர்பேட்டை க்கு சென்று அங்கு இளைஞர் உடன் சேர்ந்து இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் நேரில் சென்று சிறுமியை மீட்டு உள்ளனர்.
இந்நிலையில், இளைஞர் சதீஷ்குமார் சிறுமியின் பெற்றோரின் தொலைபேசிக்கு அழைத்து பணம் கொடுக்கவில்லை என்றால் சிறுமியின் புகைப்படத்தை மாப்பிங் செய்து இணையதளத்தில் பரப்பி விடுவேன் என மிரட்டியதாக சிறுமியின் பெற்றோர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை சென்று இளைஞர் சதீஷ்குமாரை கைது செய்து, போக்க்ஷோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, பெரியகுளம் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பெயரில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.