ஆயுதங்களுடன் ரவுசு காட்டிய கோவை தமன்னா புது வீடியோ வெளியீடு ; காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 11:18 am

கோவை ; இன்ஸ்ட்டாகிராமில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட இளம் பெண்ணை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் வசித்து வந்த தமன்னா என்ற இளம் பெண் ஆயுதங்களுடன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களை வெளியிட்டதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த கோவை மாநகர காவல் துறையினர் அப்பெண்ணை தேடி வந்தனர். அதேசமயம் அந்தப் பெண் தான் தற்பொழுது திருந்தி கணவருடன் வாழ்ந்து வருவதாகவும், ஆறு மாதம் கருவுற்று இருப்பதாகவும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும் ஆயுதங்களுடன் பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அந்த இளம் பெண் சங்ககிரி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அங்கு சென்ற கோவை போலீசார் தமன்னாவை பிடித்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை பீளமேடு காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 478

    0

    0