திருப்பத்தூர் அருகே கணவனுக்கு தெரியாமல் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞரை வீட்டுக்கு அழைத்த பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த காவாபட்டறை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி நதியா (33). இன்ஸ்டாகிராமுக்கு அடிமையான இவர், ரீல்ஸ்களை போடுவதை தினமும் வாடிக்கையாக வைத்துள்ளார். நதியா போடும் ரீல்ஸ் வீடியோவிற்கு அடிமையான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஸ்வரர் (20), அவ்வப்போது நதியாவிடம் இன்ஸ்டாகிராமில் பேசியும் பழகியும் வந்துள்ளார்.
இந்த நிலையில், பிரகதீஸ்வரர் ஒரு வேலை காரணமாக திருப்பத்தூர் வருகிறேன், உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதன் காரணமாக, கணவனுக்கு தெரியாமல் நீலிக்கொல்லி பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு கடந்த 27ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பிரதீஸ்வரரை வரவழைத்து உள்ளார். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, பிரகதீஸ்வர் நதியாவை பார்த்து உன்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் தங்க நகையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு, தாலி சரடு மட்டும் தங்கம் என நதியா கூறியுள்ளார்.
அப்போது, திடீரென கழுத்தில் இருந்த தாலி சரடை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நதியா இந்த சம்பவம் குறித்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று பிரகதீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த நதியாவின் மூன்றரை பவுன் தங்கத் தாலி சரடை போலீசார் பறிமுதல் செய்தனர். இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு வீட்டிற்கு வரவழைத்த வாலிபர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.