இன்பாக்ஸை திறந்தாலே நிர்வாணப் புகைப்படம்… இன்ஸ்டாவில் பெண்களை மயக்கும் மன்மதன்… FAKE ID வலையில் சிக்கிய சம்பவம்…!!

Author: Babu Lakshmanan
2 November 2023, 5:43 pm

இன்ஸ்டாகிராம் மூலம் பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண்ணுடன் குடும்பத்தார் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கயத்தாரில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில், பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு சென்ற மனைவி ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் தூத்துக்குடியில் உள்ள கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்தது முதல், மனைவியின் செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் இருந்ததாகவும், அவ்வப்போது செல்போனில் பேசுவது இன்ஸ்டாகிராமில் சேட் செய்வது போன்ற செயல்களை ஈடுபட்டு வந்ததால் அதிருப்தி அடைந்த கணவர், மனைவியிடம் கேட்டதற்கு கணவர்- மனைவி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மனைவி இல்லாத நேரம் அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது. இன்ஸ்டாகிராமில் Mass sundhar17 என்ற ஐடிக்கு அவ்வபோது பேசி வந்ததும் தெரியவந்தது. இந்த ஐடி யார் என்று மனைவியிடம் கேட்டதன் காரணமாக இருவருக்கும் சண்டை முற்றிய நிலையில் மனைவி தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும், கடந்த 2023 மார்ச் மாதம் விவகாரத்து கேட்டு திருநெல்வேலி நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தையுடன் விவகாரத்தை பெரும் நிலை ஏற்பட காரணமாக இருந்த அந்த நபரை கண்டறிய திட்டமிட்ட அந்தப் பெண்ணின் கணவர், இன்ஸ்டாகிராம் மூலம் போலியாக ஒரு ஐடி உருவாக்கி mass sundar 17 என்ற ஐடிக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார்.

நட்பு அழைப்பை ஏற்று அவர் தொடர்ந்து பேசி வந்த நிலையில், மேலும் இவர் மற்ற பெண்களிடம் சர்வ சாதாரணமாக பேசி வருவதாகவும், மேலும் பெண்களுக்கு தங்களுடைய ஆபாச படங்களை அனுப்புவதாகவும் நீங்க அனுப்ப வேண்டும் எனவும் போலி ஐடிக்கு கட்டாயப்படுத்தி இருக்கிறார். உதாரணத்திற்காக அவரிடம் பேசிய பெண்கள் அனுப்பிய புகைப்படங்கள் ஆபாச படங்களை போலி ஐடிக்கு அனுப்பிய நிலையில், இதனை கண்ட கணவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளார்.

அதில் தன்னுடைய மனைவி புகைப்படம் உட்பட பல்வேறு பெண்களின் புகைப்படம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரியின் அடிப்படையில் திருநெல்வேலி மாநகர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் காவல்துறையினர், இன்ஸ்டாகிராம் ஐடி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் சுந்தர் என்ற இளைஞரை கைது செய்து அவருடைய செல்போனை பறிமுதல் செய்து காவல்துறை நடத்திய விசாரணையில், அவர் ஐடி ஊழியர் போல டிப்டாப் உடையுடன் வெளிநாடு வாழ்க்கை, சொகுசு கார் என பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, திருமணமான மற்றும் திருமணமாகாத இளம் பெண்களை அவருடைய நட்பு வலையில் விழ வைத்து, பிறகு அவர் ஆசைக்கு அனைவரையும் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, அவரை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்டாகிராம் மோகத்தில் மூழ்கிய இளம் பெண்களும், குடும்ப பெண்களும் வாழ்க்கையை எதிர்காலத்தில் நினைத்துப் பார்க்காமல் ஒரு நிமிடம் எடுக்கும் இந்த முடிவு, அவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 476

    0

    0