பழிவாங்குவதற்கு முன் அமித்ஷா (அ) மோடி ராஜினாமா செய்யணும் : பாஜகவில் இருந்து எழுந்த குரல்!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2025, 12:55 pm
பகல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். எந்த மதம் என கேட்டு தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: பகல்காம் தாக்குதல் எதிரொலி : திருப்பதி கோவிலுக்கு எச்சரிக்கை.. தீவிர சோதனை!
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் சயீத்தின் லஷ்கர் , தொய்பா அமைப்பின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த அமித்ஷா உடனே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மோடி தலைமையில் அமைச்சரவை கூடி, பாகிஸ்தானியர்களை 48 மணி நேரத்தில் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றினர்.
இதனிடையே அமித்ஷா பதவி விலக வலியுறுத்தித இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர், அதே சமயம் பாஜகவில் இருந்தும் குரல் எழுந்துள்ளது.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது X தளப்பக்கத்தில் அடுத்தடுத்து பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இன்று காலை 3.23 மணியளவில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பழிவாங்குவதற்கு பதிலாக மோடி அல்லது அமித்ஷாவை ராஜினாமா பண்ண சொல்லுங்க.

அவங்களை (பாஜக அரசு) எத்தனை முறை சோதனை செய்வது? சீனா, பாகிஸ்தான், மாலத்தீவு, வங்காளதேசம் விவகாரத்தில் அமித்ஷாவும், மோடியும் சரண்டராகிவிட்டனர். பாரத மாதா அவமானப்படுத்த மாட்டார் என பதிவிட்டுள்ளார்.
