திமுகவுக்கு சனி பிடித்துள்ளது, உளவுத்துறை சரியாக இல்லை.. கலவரத்தை ஏற்படுத்த முயற்சி : காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2022, 2:18 pm

கோவையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்தித்தார்.

அந்த சந்திப்பில் அவர் கூறும் பொழுது.. சிலிண்டர் வெடித்தால் எப்படி பால்ஸ் குண்டுகள் இருக்கும். காவல்துறை இந்த விவகாரத்தை சரியாக விசாரிக்க வேண்டும். கோவைக்கு அச்சுறுத்தல் உள்ளது. உளவுத்துறை சரி இல்லை.
தொண்டாமுத்தூரில் சட்ட விரோதமாக பங்களாதேஷை சேர்ந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்று நடக்கும். இந்த அரசுக்கு சனி பிடித்துள்ளது. ஆன்மீகத்திற்கு எதிராக தமிழக அமைச்சர்கள் பேசுகின்றனர்.
உளவுத்துறையை மாற்ற வேண்டும். சைலேந்திரபாபு டிஜிபி ஆனவுடன் செயல்பட முடியவில்லையா என்ற சந்தேகம் உள்ளது.

சிலிண்டர் வெடித்தால் ஆணி எப்படி வந்தது. இது பெரிய சதி. கோவையில்
புலனாய்வு துறைக்கு தனி எஸ்.பி தலைமையில் அலுவலகம் அமைக்க வேண்டும். கூட்டத்தில் இது வெடிக்க வாய்ப்பாக இருந்திருக்கலாம். அதற்குள் தவறுதலாக வெடித்தது.

இந்த சம்பவத்தில் பயங்கர வாத அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. சம்பவ இடத்திற்கு காவல் துறை எங்களை அனுமதிக்கவில்லை. கோவையில் கலவரம் உருவாகும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 456

    0

    0