நாளை பதவி ஏற்கும் கவுன்சிலர்கள்: 6 வருடங்களுக்கு பின் மாமன்றம் புதுப்பிக்கும் பணி தீவிரம்…!!

Author: Rajesh
1 March 2022, 3:45 pm

கோவை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நாளை கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலில் பதவியேற்க உள்ளனர். புதிய கவுன்சிலர்களை வரவேற்கும் விதமாக மாநகராட்சி மாமன்ற அலுவலகம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

அங்கு கவுன்சிலர்கள் அமரும் இருக்கை, மேஜைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு போடப்பட்டுள்ளது. மாநகராட்சி வளாகம் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது. 6 வருடங்களாக பயன்படுத்தபடாமல் இருந்ததால் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து கிடந்தன. அவை அகற்றப்பட்டு புது ஓடுகள் போடப்பட்டு வருகிறது. மேயர் அமரக் கூடிய இருக்கை, மேஜைகளும் போடப்பட்டுள்ளது.

மேயர் பேசுவதை கேட்கும் வண்ணம் அரங்கம் முழுவதும் ஸ்பீக்கர்களும் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது மாநகராட்சியில் 60க்கும் மேற்பட்ட பெண் கவுன்சிலர்கள் உள்ளதால் விக்டோரியா ஹால் பகுதியில் உள்ள கழிவறைகள் புனரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் 72வார்டாக இருந்தது தற்போது 100வார்டாக அமைந்துள்ளது. இதற்கு ஏற்றவாறு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!