திருப்பூர் மாவட்ட திமுகவை நான்காக பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்ப்பட்டுள்ள நிலையில், இதனால் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட திமுகவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்காக பிரித்துள்ளது திமுக தலைமை. இதில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக செல்வராஜ், மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்டத்துக்கு தினேஷ்குமார், தெற்கு மாவட்டத்துக்கு இல.பத்மநாபன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
திசைக்கு நான்கு பேரை நியமித்துவிட்டோம், இனி பிரச்னை இல்லை என திமுக தலைமை பெருமூச்சு விடுவதற்குள், இது என்ன புது தலைவலி என்ற மனநிலையில் உள்ளனர் பொறுப்பாளர்கள். இது தொடர்பாக தனியார் நாளிதழிடம் பேசிய திருப்பூர் திமுகவினர், “4 பேரையும் மாவட்டப் பொறுப்பாளர்களாக அறிவித்ததுமே இவர்களுக்குத்தான் தலைமை சீட் கொடுக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட கட்சியினர் சலிப்பில் உள்ளனர்.
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளைக் கேட்டு கடந்த முறையே கம்யூனிஸ்ட்கள் மோதின. இந்த முறையும் அவர்கள் போட்டிக்கு வருவார்கள். எனவே, தனக்கு சீட் இல்லாமல் போய்விடுமோ, அதற்காகத்தானோ மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்திருக்கிறது தலைமை என்ற சந்தேகத்தில் இருக்கிறார் திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ்.
ஒருவேளை, பல்லடம் தொகுதியில் சீட் கொடுத்தால், அதிமுக கோட்டையை வெல்ல முடியுமா என்ற சந்தேகமும் அவரது கலக்கத்துக்கு காரணமாக உள்ளது. கடந்த முறை தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணியிடம் தோற்ற கார்த்திகேய சிவசேனாபதி, இந்தமுறை காங்கயத்தில் போட்டியிடும் திட்டத்தில் உள்ளார்.
ஒருவேளை, அவர் நினைத்தது நடந்தால் அமைச்சர் சாமிநாதன் மடத்துக்குளத்துக்கு மாற வேண்டி இருக்கும். ஆனால், அங்கேயும் முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மகள் தொகுதியைப் பிடிக்க முழு வீச்சில் இறங்கி வருகிறார். இதனால், சாமிநாதனுக்கும் தர்மசங்கடமான நிலையே.
இதையும் படிங்க: ’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!
மேலும், தெற்கு மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் உடுமலைக்கு குறிவைக்கிறார். அதிலும், அதிமுக வலுவாக இருக்கும் தொகுதி. கடந்த முறை மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், சில உள்ளடிகளால் தோற்கடிக்கப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், கொங்கு மண்டலம் எனப்படும் கொங்கு பெல்ட் மாவட்டங்களை உள்ளடக்கிய தொகுதிகள் அதிமுக கோட்டையாகவே கருதப்படும் நிலையில், அந்த கொங்கு மண்டலத்தைப் பிடிக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. இது, கடந்த 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிரொலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
This website uses cookies.