நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார்.
சென்னை: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கில் 12 வார காலத்துக்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை.
அப்போது, அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கடிதம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சீமான் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது காவல்துறை. அப்போது, அதை அகற்றிய சீமானின் வீட்டு உதவியாளருக்கும், போலீசாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட விவகாரமும், அதைத் தொடர்ந்த சீமானின் பேச்சுகளும் அரசியல் மேடையில் பெரும் பேசுபொருளானது.
இதனிடையே, உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணையின் போது சீமான் தரப்பு, இந்த வழக்கு ஏற்கெனவே மூன்றுமுறை தொடரப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. புதிய அரசு ஆட்சியமைத்ததும்தான் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.மேலும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்ற சந்தேகம் இருக்கிறது” என வாதிடடப்பட்டது.
இதையும் படிங்க: டீயில் எலி மருந்து காதலனுக்கு கொடுத்த காதலி.. என்னது அண்ணனா? விழுப்புரத்தில் பகீர்!
இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்
, எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்த பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்த பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நான் வரவேற்கிறேன். இருதரப்பும் அமர்ந்து இந்த வழக்கில் பேச தகுதியற்றது” எனக் கூறியுள்ளார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.