நெல்லை திமுகவில் உட்கட்சி பூசல் : மாநகராட்சி மன்றத்துக்குள் நுழைய எதிர்ப்பு.. இதரப்பு மோதலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 8:49 pm

நெல்லை மாநகராட்சியில் திமுக இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை மாநகராட்சி ஆணையரை சந்தித்து மக்கள் பிரச்சனை தொடர்பாக கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திமுக பாளையங்கோட்டை எம் எல் ஏ அப்துல் வஹாப் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள், திமுக மாவட்ட மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தரப்பினர் மாநகராட்சிக்குள் வரக்கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, கைகலப்பு மற்றும் தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றதால் பரபரப்பு நிலவியது.

தகவல் அளித்தும் காவல் துறையினர் வராத நிலையில் நீண்ட நேரம் பிரச்சனை நிலவியது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!