கோவை: சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பெற்ற வெற்றி போல , வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத்,இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தொடரும் என ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோவையில் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் துவங்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் முதல் அலுவலகமாக கோவையில் துவங்கப்பட்ட இதற்கான துவக்க விழாவில், மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் மாற்றத்தை தருவதாக கூறினாலும், அதற்கு இணையாக எந்தவித மாற்றங்களும் இல்லாமல் இருப்பதால்,மக்கள் ஏற்கனவே உள்ள கட்சியினருக்கு வாக்களிப்பதாக கூறிய அவர்,தற்போது அந்த நிலை மாறி அரவிந்த் கெஜ்ரிவாலின் செயல்பாட்டால், மக்கள் ஆம் ஆத்மி கட்சியை நோக்கி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்,தமிழக முதல்வரே டெல்லிக்கு சென்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சாதனையாக பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் இயங்குவதை பார்த்தாக கூறிய அவர், எனவே ஊழலில்லாத, கடன் இல்லாத,மக்களின் நலன் காக்கும் அரசாக டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் செயல்பட்டதன் விளைவாகவே பஞ்சாப்பின் வெற்றி என குறிப்பிட்டார்.
இந்த வெற்றி தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தல்களில், குஜராத்,இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள்,தாமோதரன்,ஜோசப்ராஜா,வேல்முருகன் மகளிரணி டெல்லி மேரி,கோவை மாவட்ட தலைவர் வாமன்,ஒருங்கிணைப்பாளர் டோனிசிங் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
This website uses cookies.