அடுத்த முதல்வர் அண்ணாமலை தான்.. அடித்து சொல்லும் அரசியல் பிரபலம்..!

Author: Vignesh
27 July 2024, 1:06 pm

மதுரை: 2026-ல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று அண்ணாமலை முதல்வராக ஆட்சி அமைப்பார் – மதுரையில் பாஜக சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் ஜமால் சித்திக் பேட்டி.

இரண்டு நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜாமல் சித்திம் இன்று மாலை விமானம் மூலம் மதுரை வந்தார். தொடர்ந்து, மதுரை மாநகர் பிபி.குளம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய தலைவர் ஜமால் சித்திக் மற்றும் தமிழக பாஜக சிறுபான்மை அமைப்பு தலைவர் வேலூர் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: தேசிய தலைவர் JB நட்டா அறிவுறுத்தல் படி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளேன் என்றும், தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறுபான்மை அமைப்பு தலைவர்களை சந்தித்து பாஜக திட்டங்கள் குறித்தும், நாளை ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடம் சென்று மரியாதை செலுத்த இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்தியாவின் தேச பக்தியின் உருவமாக ராக்கெட் வீரர் அப்துல் கலாம் திகழ்கிறார். சிறுபான்மை சமூகத்திற்கு பாஜக அரசு பல்வேறு திட்டங்கள் செய்திருக்கிறது.! அப்துல் கலாமை முன்னிலைப்படுத்தி பாஜக முன்னெடுக்கும். பாஜக யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை., பாஜக தேசியம் முழுவதும் அரவணைக்கும், பாதுகாக்கும்.

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு மத்திய அரசு கொடுத்த பட்ஜெட்டை விமர்சனம் செய்வதற்காக பேசுகிறது. அனைவருக்கும்மான பட்ஜெட் தான் பாஜக அரசு வழங்கி இருக்கிறது. 2026 நிச்சயமாக தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்று அண்ணாமலை முதல்வராக ஆட்சி அமைப்பார் என அவர் தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி