விரைவில் விண்வெளிக்கு பறக்கும் மனிதன்: முன்னாள் இஸ்ரோ தலைவர் வெளியிட்ட சூப்பர் தகவல்..!!
Author: Rajesh10 April 2022, 10:31 am
கன்னியாகுமரி: தொலைதொடர்பு சேவையில் தனியாரின் போட்டியிருந்தால்தான் கிராமங்களில் குறைந்த செலவில் தொலைதொடர்பு சேவை வழங்கமுடியும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அருகே அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இந்திய விண்ணெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவரும் விண்வெளி ஆராய்ச்சிமைய விஞ்ஞானியுமான சிவன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விஞ்ஞானி சிவன் கூறுகையில் தமிழகம் உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருத்தும் தொழில்நுட்பம்,விவசாயம் சார்ந்தவற்றில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்திவரும் மாணவர்களில் மாநிலத்திற்கு தலா 3 மாணவர்கள் என மொத்தம் 108 இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோ மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள் என தெரிவித்தார்.
மேலும், காலநிலை மாற்றத்தை கண்காணிக்க அமெரிக்காவின் நாசாவுடன் இஸ்ரோவும் இணைந்து நவீன செயற்கைகோள் அனுப்பும் முயற்சியில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் சூரியனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து கவனித்து, அதன் வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் பற்றிய தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஆதித்யா எல்1 என்று பெயரிடப்பட்ட திட்டம் மற்றும் சந்திரனை நோக்கி மீண்டும் ஒரு விண்வெளி பயணம் திட்டம் இந்தியர்கள் விண்வெளி பயணம் (உள்நாட்டு கட்டமைப்பால்) போன்ற திட்டங்களின் ஆய்வு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்றும் வெகு விரைவில் நிறைவடையும் என தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடவும் ஏலத்திற்கும் பிஎஸ்என்எல் முன் வரலாம் என்றும் அதே வேளையில் தகவல் தொடர்பு துறையில் தனியார் பங்களிப்பும் போட்டியும் இருந்தால்தான் சேவைகளை குறைந்த செலவில் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்க முடியும் .
4-ஜி 5-ஜி சேவைகளுக்கான தொழில்நுட்பத்தை பொறுத்தவரை இந்தியா முழுக்க முழுக்க சொந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவாக உள்ளது என்றும் கூறினார்
மேலும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் மட்டுமில்லாமல் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மத்திய பகுதி என இஸ்ரோ சார்பில் புதிய 6-பகுதிகளில் புதிய ஆராட்சி மையங்கள் தொடங்க திட்டம் இருப்பதாகவும் கூறினார்