சாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்கள் மாற்றம்?.. -அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்..!
Author: Vignesh23 August 2024, 4:33 pm
ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்றம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுப்பார் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட சதுரங்கப் பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொல்குடியினர் மற்றும் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் கீழ் நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்வில் செல்வராஜ் பங்கேற்று 290 பயனாளிகளுக்கு சுமார் 1.76 கோடி மதிப்பிலான மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் படகு ,மீன்பிடி வலை குளிரிட்டும் பெட்டி ,ஆடுகள், கோழிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தமிழகத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை அரசு பள்ளிகள் என மாற்ற வேண்டும் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த முதல்வர் நடைமுறைப்படுத்துவார் என்றும்
ஜாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியாது என திருமாவளவன் கூறிய கருத்திருக்கும் பட்டியலின சமூகம் ஆதரவு அளித்தால் முதல்வர் ஆக்குவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்திருக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.
0
0