மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி நெருக்கம் : நியாயம் கேட்ட காதலிக்கு கொலை மிரட்டல்.. பயிற்சி பாதிரியார் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 1:50 pm

நெல்லை : மாணவியை காதலித்து நெருங்கிப் பழகி ஏமாற்றி கொலை மிரட்டல் விடுத்த பயிற்சி பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி போலீஸ் ஆயுதப்படை மைதானம் பகுதியை சேர்ந்த இன்பராஜ் மகன் மில்டன் கனகராஜ் (வயது 26). இறையியல் படிப்பு முடித்து கே.டி.சி. நகர் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் பயிற்சி பாதிரியாராக உள்ளார்.

இவரது வீட்டிற்கு அருகில் வசித்த ஒரு மாணவியுடன் ஒன்றரை ஆண்டாக நெருங்கி பழகி வந்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனால் பாதிரியாரின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்த்துள்ளனர். மாணவி சென்று கேட்டபோது அவதூறாக பேசியதோடு எரித்து கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார்.

மாணவியின் புகாரின் பேரில் தாலுகா போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மில்டன் கனகராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Ajith Dhanush New Movie அஜித்துக்காக தனுஷ் எடுக்க போகும் தரமான சம்பவம்…ஒருவேளை இருக்குமோ.!