ஒரே ஒரு திரைப்படத்தில் ஏற்பட்ட நெருக்கம்… ஒரே வீட்டில் வசிக்கும் தமிழ் சினிமா இளம் ஜோடி : வெளியான பலான கதை!!
Author: Udayachandran RadhaKrishnan24 March 2022, 1:17 pm
தமிழ் சினிமாவில் நெருக்கமான காட்சிகளில் நடிப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த கதையெல்லாம் உள்ளது. ஆனால் அதே சமயம் ரகசியமாக உறவு கொண்ட சினிமா ஜோடிகளும் உண்டு.
தற்போது ஒரே ஒரு படத்தில் ஜோடியாக சேர்ந்த பின், அந்த படத்தில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக நிஜமாகவே லிவ்விங் டூகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வரும் முக்கிய பிரபலமான ஜோடியை பற்றி கோலிவுட்டே கிசுகிசுக்கிறது.
சர்ச்சையான தமிழ் படம் மூலம் அறிமுகமானவர் ஹரீஷ் கல்யாண். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
பின்னர் பிரபல சேனலில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் அவருடைய நடவடிக்கைகளை பார்த்த ரசிகர்கள் அவரை புகழ்ந்தனர். இந்த ஷோவுக்கு பின் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார்.
அப்போது தான் பிரபல இசையமைப்பாளர் தயாரிப்பில் வெளியான பியார் பிரேமம் காதல் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த திரைப்படத்தில் பிரபல ஷோவில் பங்கேற்ற ரைசாவும் நடித்தார்.
காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த படத்தில் வரும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க தொடங்கியது முதல் இருவருக்கும் காதல் அதிகமானது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்தனர்.
இந்த விஷயம் வெளியே தெரிந்த பிறகு, அவரிடம் கேட்டதற்கு கூலாக ஆமாம் என்று பதில் சொல்லிவிட்டார். இருவருக்கும் இடையில் உள்ளது வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிந்த நிலையில் இரு வீட்டின் குடும்பத்தினரும் முடிவு எடுக்க முன் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.