பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைகளுக்கு மிரட்டல்.. சமூக வலைதளங்களில் அவதூறு : பேரூராட்சி பணியாளர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 12:30 pm

தூத்துக்குடி : தனியார் தொலைக்காட்சியில் பெரியார் வேடமிட்டு குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு கயத்தார் பேரூராட்சி தற்காலிக பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு (வயது 36). கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் தலைவர்கள் பற்றிய நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதுகுறித்து சமூகவலை தளத்தில் பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும், தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குபதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

இது பற்றிய முழுவிபரம்

ஒரு சிறுமி தனியார் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு சமூகத் தலைவர் போன்று வேடம் அணிந்த வீடியோவை ஒரு முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்துவிட்டு அந்தச் சிறுமியை அடித்துக் கொலை செய்யவேண்டும் என்று சமூகத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருத்து (Comment) பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் அவர்களுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்டவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் சுப்புராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, எட்டையாபுரம் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு என்பவர் ஒரு தலைவரை இழிவுபடுத்தும் வகையிலும், ஒரு சமூகத்திற்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையிலும் முகநூலில் கருத்து பதிவிட்டது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று சமுதாயத் தலைவர்களை இழிவுபடுத்தி சாதி, மதக் கலவரங்கள தூண்டும் வகையில் வன்முறையான செய்திகளையோ, புகைப்படங்களையோ மற்றும் வீடியோக்களையோ சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1308

    0

    0