அந்தரங்க விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் : ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் மீது பெண் யூடியூபர் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 August 2023, 2:28 pm

அந்தரங்க விஷயங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் : ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது ஆண் நண்பர் மீது பெண் யூடியூபர் புகார்!!

கோவையைச் சேர்ந்த யூடியூபர் சித்ரா என்பவர் மக்கள் பார்வை கல்வி அறக்கட்டளை என் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும் அதன் பெயரிலேயே யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருவதாகவும், அதில் சிக்கந்தர் சம்பந்தமாக தகவல் வெளியிட்டதால், ஆத்திரம் அடைந்த சிக்கா என்கிற சிக்கந்தர் தினமும் அவரது சேனல் மூலமாக கேலி செய்தும் எனது மகளின் அந்தரங்க விஷயங்களை வெளியிடுவதாகவும், தன்னை பெப்சி பெரியம்மா என்று அடைமொழி வைத்தும் கிண்டல் செய்வதோடு அந்தரங்க விஷயங்களை வெப்சைட்டில் வெளியிடுவதாகும் அதோடு 40 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவருடன் ரவுடி பேபி சூர்யாவும் சேர்ந்து கொண்டு எனது அந்தரங்க புகைப்படத்தை கோவை தமிழன் என்ற சேனல் வழியாக வெளியிடுவேன் என மிரட்டி வருகின்றனர்.

இதனால் மன உளைச்சலில் இருப்பதாகவும் தன்னை மிரட்டல் விடுத்த அவர்கள் மீதும் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த யூடியூபர் சித்ரா, தான் யூடியூப்சேனல் நடத்தி வருவதாகவும், அதோடு குழந்தைகளுக்காக சேவை செய்து வருவதாகவும், யூடியூப் மூலம் ரவுடி பேபிசூர்யா, சிக்கந்தர், சாதனா இவர்கள் போடுகிற வீடியோ குழந்தைகளை மிகவும் பாதிக்குது என்றும், அசிங்கமான வீடியோ போடுவது, பச்சை பச்சையா பேசுவதால் குழந்தைகள் இதை பார்த்து கெட்டு போறாங்க. இதை கண்டித்து கேட்டா மிரட்டல் விடுகின்றனர்.

யூடியூப் சேனல் வழியாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதனால் மதுரை கமிஷனர் சந்தித்து புகார் கொடுத்து உள்ளதாகவும்,பெண்களை மூர்க்கமா தாக்குவது, ஆபாசமாக சேனலில் போடுவது போன்ற சேனல்களை முடக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Sai Abhyankar viral songs ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!