கட்சிக்கு நிதி என கூறி டாஸ்மாக்கில் மாமூல் கேட்டு மிரட்டல் : ஆர்எஸ்பி கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய விற்பனையாளர்.. வைரலாகும் வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2022, 2:22 pm

கோவை : டாஸ்மாக்கில் மாமூல் கேட்டும் மிரட்டும் புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகரின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை பீளமேடு சித்ரா விமான நிலையம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கடையில் மாமூல் கேட்டு புரட்சிகர சோசலிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி வந்தார்.

நிதி கேட்டதற்கு, காசாளர் பணம் கொடுக்க மறுத்து கோபமடைந்து வாக்குவாதம் செய்தார்.

இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என கட்சி நிர்வாகி கடையில் இருந்த காசாளரை மிரட்டுவதும், வீடியோ எடுத்தவரை நல்லா எடுத்துக்க, நீ எந்த மீடியா என கூறு என வாக்குவாதம் செய்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்த காட்சி எப்போது எடுக்கப்பட்டது, வெளியிடப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Aishwarya Rajinikanth upcoming project ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!