தலைக்கேறிய போதையில் அரைநிர்வாணத்தோடு நடுரோட்டில் வாகன ஓட்டிகளை மிரட்டிய போதை ஆசாமி : END CARD போட்ட போலீஸ்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2022, 9:55 am
ஒட்டன்சத்திரத்தில் குடிபோதையில் அரைநிர்வாணத்தில் வாகனங்களை மறித்து பொதுமக்களை அச்சுருத்திய போதை ஆசாமியை நீண்ட நேரம் போராடி ஆட்டோவில் அள்ளிச் சென்ற காவல்துறையினர் வீடியோ வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் குடிபோதையில் அரைநிர்வாணத்தில் வாகனங்களை செல்ல விடாமல் தடுத்தும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களை நீண்ட நேரமாக போதை ஆசாமி ஒருவர் அச்சுருத்தி வந்தார்.
இந்நிலையில் அங்கு வந்த ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மற்றும் போலிசார் போதை ஆசாமியை நீண்ட நேரம் போராடி ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர்.
குடிபோதையில் அரைநிர்வாணத்தில் போதை ஆசாமி வாகனங்களை மறித்து பொதுமக்களை அச்சுருத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.