தலைக்கேறிய போதையில் 60 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் தவறி விழுந்த ஆசாமி : ஷாக் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2023, 5:10 pm

கன்னியாகுமரி : 60 அடி உயரத்திலிருந்து ரயில்வே தண்டவாளத்தில் மது போதையில் தவறி விழுந்த நபரை தீ அணைப்பு துறையினர் காயங்களுடன் உயிருடன் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 அடி உயரத்தில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிருக்கு போராடிய படி கிடப்பதாக குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது உடலில் சிறு சிறு காயங்களுடன் உயிருக்கு போராடிய படி சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கிடந்துள்ளார்.

உடனே தீ அணைப்பு துறையினர் அந்த நபரை மீட்டு மேலே கொண்டு வர உயரம் அதிகமாக இருந்ததால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஸ்டச்சரில் சுமந்து வந்து மேல் பகுதிக்கு கொண்டு வந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தவறி விழுந்த நபர் மருதங்கோடு பகுதியை சேர்ந்த சிங் (45)என்றும் ரயில்வே பாலத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த பாலத்தின் மேல் மது போதையில் இருந்ததால் தவறி விழுந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 775

    0

    0