சென்னையில் போதையில் கத்தியுடன் சுற்றிய ரவுடி.. மடக்கி பிடித்த போலீஸ் : வைரலாகும் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 6:55 pm

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடிப்போதையில் கத்தியுடன் சுற்றி திரிந்த ரவுடியை மடக்கி பிடித்த போலீசாரின் சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளது.*

வண்ணாரப்பேட்டை MC ரோடு, GA ரோடு பகுதியில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட ரெடிமேட் கடைகள் மற்றும் ஜவுளி கடைகள் காலனி கடைகள் உள்ளன.

சென்னை, திருவள்ளூர் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஜவுளி களை வாங்கி செல்கின்றனர்

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை G. A ரோடு பகுதியில் கையில் கத்தியுடன் ஓருவர் சுற்றி திரிவதாக போலீசார்க்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் கத்தியுடன் சுற்றி திரிந்த நபரை ‌‌ கைது செய்து காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவன் பெயர் மணி என்பதும் இவன் மீது வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: வி.கே பாண்டியனை குறைசொல்வது துரதிருஷ்டவசம் : அவர் அரசியல் வாரிசே கிடையாது.. நவீன் பட்நாயக் விளக்கம்!

வண்ணாரப்பேட்டை பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்ட சம்பவம் அரங்கேரி உள்ள நிலையில் மீண்டும் ரௌடி ஒருவர் கைது செய்யப்பட்டது வியாபாரிகளிடையை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!