போதையில் பெண்கள் ரகளை… போதை ஆசாமிகளிடம் கைவரிசை.. சுதாரித்தால் தர்ம அடி : திகைத்த திருப்பூர்!

Author: Udayachandran RadhaKrishnan
11 June 2024, 12:04 pm

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் கோவை, பொள்ளாச்சி உடுமலை உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு மாநகர பேருந்துகளும், திருப்பூர் நகரப் பகுதிகளுக்கு செல்வதற்கு நகர பேருந்துகளும், மினி பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் இந்த நிலையில் இன்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால்வெளியூர் சென்றிருந்த ஏராளமான பெற்றோர் குடும்பத்துடன் பேருந்தில் பயணித்து திருப்பூர் வந்திருந்தனர்.

இந்த நிலையில்பேருந்து நிலையத்தின் முன்புற பகுதியில் திடீரென மது போதையில் இருந்த போதை ஆசாமியை சரமாரியாக இரண்டு பெண்கள் அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்குதலில் ஈடுபட்டனர்,

இந்த நபர் அங்கிருந்த பாலியல் தொழிலில் ஈடுபடும் இந்த இரண்டு பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்தனர். அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இருந்த இரண்டு பெண்கள் போதை ஆசாமி சுதாரிக்கவே அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி இந்த இரண்டு பெண்கள் கோபமடைந்து மது போதையில் இருந்த நபரை அடித்தனர்,தாக்குதலுக்கு உள்ளான நபர் மது போதையில் இருந்ததால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு பெண்களும் மாறி மாறி அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனை பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்தார் அவரையும் அந்த பெண்கள் மிரட்டினார் இதனை அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் யாரும் இந்த இரண்டு பெண்களை தடுக்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படுகிறது.

திடீரென பேருந்து நிலையத்திற்குள் வைதிகள் கூட்டம் கூடி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை அங்கிருந்து மீட்டும்,போதை ஆசமியையும் சரமாரியா தாக்கிய இரண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும்போலீசார் விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து மது போதையில் இருந்த போதை ஆசாமியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான போதை ஆசாமிகள் கெஸ்ட் ஹவுஸ் போல பயன்படுத்தி வருகின்றனர் தினமும் காவல்துறையினர் மாநகராட்சி ஊழியர்கள் இவர்களை கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 333

    0

    0