போக்வரத்து விதி மீறி நாங்கள் கனிமொழி எம்பியின் உதவியாளரின் தம்பி என போலீசாரை மிரட்டிய போதை இளைஞர்கள் தற்போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் வாகன தனிக்கையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் தாறுமாறாக வந்த உயர் ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய இளைஞர் ஒருவர் நான் யார் தெரியுமா? நீ என்ன பெரிய ஆளா? என்று கேள்வி கேட்டு மதுபோதையில் அலப்பறையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில் அந்த நபரின் செல்போனை போலீசார் பறித்ததாக தெரிகிறது.இதில் ஆவேசம் அடைந்த அந்த போதை ஆசாமி தான் தி.மு.க எம்.பி. கனிமொழியின், உதவியாளரின் சகோதரர் என்று கூறி போலீசாரை மிரட்ட ஆரம்பித்தார்.
அவருடன் வந்த ஒருவர் அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் மீண்டும், மீண்டும் வந்து அலப்பறையில் ஈடுபட்டு வந்தார்.
இதனை அங்கு இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.குடிபோதையில் வாகனம் இயக்கி சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினரை மிரட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்க: சமந்தா விவாகரத்து குறித்து பற்ற வைத்த அமைச்சர்… திடீர் பல்டி : பரபரப்பு பேட்டி!
இந்நிலையில் போக்குவரத்து காவலர் கோவை காட்டூர் சட்டமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகாரின் கிரண், பாலாஜி மற்றும் சிவானந்தம் ஆகிய பேரில் மூன்று பேர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் மீது போக்குவரத்துக் காவலரிடம் தகாத வார்த்தையால் மிரட்டியது பணி செய்யவிடாமல் தடுத்தது பொது இடத்தில் குடிபோதையில் ரகளை செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் நாங்கள் மது போதையில் இருந்ததால் காவல் துறையினரிடம் தகாத வார்த்தையில் பேசி தகராறு ஈடுபட்டதாக கூறும் அவர் இதனால் காவலர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும், மேலும் தி.மு.க எம்.பி கனிமொழி பி.ஏ யார் என்பது எனக்கு தெரியாது என்றும், பொது இடத்தில் அவர்கள் பெயரை பயன்படுத்தியது தவறு என்றும் தெரிந்தவரிடம் பேசுவதற்காக அவர் பெயரை பயன்படுத்தியதாக கூறியவர் அதற்கு மன்னிப்பு கேட்கும் வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.